உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கைது

உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கைது.


ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். 

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவன் ஒருவனே பரீட்சை கண்காணிப்பு குழுவினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து குறித்த மாணவன் கற்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். 

கைது செய்யப்பட்டுள்ள குறித்த மாணவன் களணி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருவதாக தெரிவித்த பொலிஸார், இவர் உயர்தரப் பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் தனது சக நண்பனுக்காக பரீட்சை எழுதி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த மாணவன் இன்று (24) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.