கண்டி - அக்குறணையிலும் கொரோனா தொற்று.

 கண்டி - அக்குறணையிலும் கொரோனா தொற்று.

கண்டி - அக்குறணை - நீரெல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சுயமாக மேற்கொண்ட PCR பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர் மீது அரச சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது PCR பரிசோதனையின் போது அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் நேற்று இரவு (30) தெரிவித்தார்.

இரண்டாவது PCR பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குறித்த நபர் குறித்தும் அவரது குடும்ப அங்கத்தினர் மற்றும் அவருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள், அவர் சென்று வந்த பிரதேசங்கள் குறித்தான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பிரதேச பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குறித்த நபர் மற்றும் அவரது குடும்பதினரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், எவ்வாறு எங்கிருந்து கொரோனா வைரஸ் தொற்றியது என்பது குறித்து இதுவரை கண்டறிய முடியவில்லை என்றும் வைரஸ் தொற்றியது எங்கிருந்து என்பது குறித்தான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஆராய்ந்து வருவதாகவும் மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

அக்குறணை பிரதேச மக்களின் முழுமையான பாதுகாப்பு நலன் கருதி பிரதேச பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பிரதேசத்தில் பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுதல் மற்றும் பொது மக்கள் ஒன்றுசேரக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உடனடியாக நிறுத்துமாறும், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அரச சுகாதார துறையினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் பிரதேச சபை தவிசாளர் பிரதேச மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டினதும் மற்றும் பிரதேசத்தினதும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார அதிகாரிளின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் எனவும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.