வடுக்களை வரமாய் கொண்ட கறுப்பு ஒக்டோபர்

 வடுக்களை வரமாய் கொண்ட கறுப்பு ஒக்டோபர்

முத்துக்களுக்காய் மூழ்கி 

முத்துக் குவியல்களை அல்லும் நித்தில மாநிலத்தில்...

பச்சை வயல்களுக்கு குறைவின்றி

 பச்சைக் கிளிகளுக்கு பஞ்சமின்றி பசியினை போக்கும் 

பசுமை நிலத்தில்...

கற்கையில் முகட்டைத் தொட்டு 

மூவினரும் பிண்ணிப் பிணைந்த பிரதேசமாம் வடகுலத்திற்கு....

யார் கண்பட்டு வந்ததோ பயங்கரம்...

காட்டுப் புலிகளில் அகப்பட்ட 

கருங்குருவி போல...

விடுதலை புலிகள் எனும் ஆயுத வலையில் அகப்பட்டது வட பூமி...

சொல்லல்லா துன்பங்களும் இன்னல்களும் மொழியில்லை அதை விவரிக்க...

கண்கள் கலங்குகின்றது....

நாவு மறுக்கின்றது... 

மனம் கனக்கின்றது..

சொற்கள் மறைகின்றது...

கடைகளை எரித்து.. 

கால்நடைகளை அபகரித்து..

உயிர்களை பறித்து..

இளைஞர்களை கைது செய்து..

கப்பம் கோரியே....

 வியாபாரம் வீழ்ச்சி உற்று...

 அறியாத பிஞ்சையும் அடக்கியே பொம்மையாக்கினர் ஆயுத முனைகளால்...

முற்றுப் பெறாத அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க நாளும் வந்தது கறுப்பு ஒக்டோபர்...

கதிரவன் ஒளியில் வட பூமியே வறண்டு போக விடியல் அன்றுடன் கருகிப் போனதை உணர்த்திய நாள்....

பிச்சை எடுக்க கூட பாத்திரமின்றி பதற விரட்டப் பட்ட நாள்...

வட முஸ்லிம்கள் அகதி என்பதையே உலகிற்கு உணர்த்திய நாள்...

சொத்துக்களை சூறையாடவா இல்லை..

சோர்ந்திருந்த முஸ்லிம்களின் நம்பிக்கையை சூறையாடவா....

தாய்மண்ணிற்கு தகுதி இல்லை எனும் உரிமையை சூறையாடவா இல்லை.

வட புலத்தில் இனச் சுத்திகரிப்பை உண்டு பண்ணவா....

இந்த பலவந்த வெளியேற்றம்

இன்னுமே புரியாத பல புதிர்களுக்கு புரிய வைக்கிறேன் என் கவிகளால்..!!!!

ஏவுகணை பாய்ந்த வெளியேற்ற உத்தரவால் 

கதிகலங்கி நின்றது 

வட முஸ்லிம் வசந்தமே சுய நினைவற்று 

வாடிப் போனது...

சில மணி நேர தவணையில் தன்னையே மறந்த உயிரற்ற ஜடமாய்...

மண்டியிட்டு மண்ணிலே தேம்பி அழுவதை கண்ட வானம் கூட தன் கண்ணீரை அடக்க முடியாது அழ ஆரம்பித்தது....

வானின் கண்ணீரோ கட்டுப்படுத்த முடியாத அளவு வெளியாக...

குளிர் எனும் குடையை அணிவித்து பச்சிலம் பாலன் முதல் 

பல் விழுந்த பெரியோர் வரை...

கடல் வழியையும்

கால் வழியையும் நாடியே 

கதிகலங்கி கனத்த மழையில் நடந்த நாள் கறுப்பு ஒக்டோபர்

பாதுகாப்பற்ற படகில் 

பயணித்த பாவையரும்..

பாதையின் வழியே பல சோதனை கடந்து பயணித்த படைகளும்...

தன் சொந்த மண்ணிற்கு முற்றுப் புள்ளியை இட்டு வந்த நாள் கறுப்பு ஒக்டோபர்

ரா பகல் பாராது மழை வெயில் தெரியாது...

கர்பிணியின் கருவை கலைத்த நாள் கறுப்பு ஒக்டோபர்

தொற்று நோய்கள் பரவ குடிநீரின்றி காட்டில் உலாவ... 

யுவதிகளோ பல குண்டுகளுக்கு இறையாக...

வட பூமியோ முஸ்லிம்களை இழக்க...

வட முஸ்லிம்களோ அகதி எனும் பெயர் பெற்ற நாள் கறுப்பு ஒக்டோபர்

30வருடம் கடந்தும் அகதி எனும் நாமம் கானலாய் போய் விடாதோ எனத் தேடும் ஏக்கப் பறவைகளுக்கு ஏற்புடைமை அற்ற நாள் கறுப்பு ஒக்டோபர்

விடியலையும் மையிருட்டாக்கி வட முஸ்லிம்களுக்கு மீள முடியா முத்திரை இட்ட நாள் கறுப்பு ஒக்டோபர்

மாறுமா காலம் இல்லை மாற்றுமா இனி வரும் யுகம்...?? விடை தெரியா வினவலுடன் கவிக்கு விடை கொடுக்கும் இவள் உங்களில் ஒருத்தி

LiTTLe WRiTeR

SHIMA HAREES

University of peradheniya

Puttalam KarambeNo comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.