நாட்டில் திருமண வைபவங்களை நடத்த இருப்பவர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!

 நாட்டில் திருமண வைபவங்களை நடத்த இருப்பவர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!

மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் திருமண வைபவ ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளினால் இந்த வைபவங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்

என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்

நடத்தப்பட்டதாக கூறப்படும் திருமண வைபவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

இந்த ஹோட்டலில் 35 பேரின் பங்களிப்புடன் திருமண வைபவம் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் முகாமையாளருக்கும்,

ஏற்பாடு செய்தவர்களுக்கும் எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதற்கமைவாக ஹோட்டல் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.