கொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை.

 கொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை.

எவ்வித வகையிலும் covid-19 நோய் தொற்று சமூகத்தில் பரவவில்லை என தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி மிகப்பெரியது எனவும் இதனால் நாடு பூராகவும் அனைத்து பிரதேசங்களிலும் தோற்றவர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் பரவல் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

covid-19 தோற்று சமூகப் பரவல் ஏற்பட்டிருக்குமானால் தொற்றாளர்களுக்கு இடையில் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வாறான அவ்வாறான நிலை இந் நாட்டினுள் இதுவரை பதிவாகவில்லை. அனைத்து தொற்றாளர்களும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்பு பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார். 

நாட்டினுள் சிறந்த சுகாதார அமைப்பு காணப்படுவதனால் கொவிட் நிலைமைக்கு முகம்கொடுக்க மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய இயலுமை உள்ளதாகவும் தொற்றாளர்கள் எவ்விதத்திலும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.