நாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை.

 நாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை.

நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை,

தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், மக்கள் தொடர்ந்தும் ஏனையவர்களுடன் அதிகளவில் தொடர்புகொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மரணச்சடங்குகள், திருமணங்கள், மத நிகழ்வுகள் மூலம் கொரோனா ரைவஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.