NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற இ.போ.ச பேருந்தில் பயணம் செய்து,
பதுளை ஹாலிஎல பகுதியிலுள்ள ரெசட் பெருந்தோட்டத்தில் மறைந்திருந்த நிலையில் நேற்று கைதானார்.

அவர் பொலன்னறுவ, அரலகன்வில தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த மாதம் 23 ஆம் திகதி தாங்கம டிப்போவுக்கு சொந்தமான என்.பி 9017 கொழும்பு-பதுளை பேருந்தில்,
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு ஹாலி எலவை வந்தடைந்தார். இந்த பேருந்தில் பயணித்தவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் கோருகின்றனர்.

ஹாலி எலவில் உள்ள மதுபான கடையொன்றிற்கு அவர் சென்றதால் அது மூடப்பட்டு, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.