என் உயிருக்கோர் மடல்

என் உயிருக்கோர் மடல்

உறவு எனும் ஊற்றினிலே நான் கண்ட உன்னதமே..

 நீ இன்றி நான் என்றால் ஆற்றினிலே ஓடுகின்ற துடுப்பில்லா ஓடையாவேன்..

குடும்பத்தின் பசி நீக்கி பரவசம் காண்பதற்கு உடல் வலியை உப்பாக்கி வியர்வையாய் சிந்துகின்ற உப்புப் பொதியானாய்....

 உன் வியர்வை கூட கடல் நீருக்கு இறையாகியதாலே உன் தியாகங்கள் உலகிற்கு இலைமறை காய் ஆகிப் போனதோ...

என்னை மகவாகப் பெற்ற போது உன் தோல்களிலே பல இரவுகள் என்னை சுமந்தாய்..

என்னை வாழ்வில் உயர்த்துவதற்காய் பல உப்பு மூட்டைகள் நீ சுமந்தாய்...

கல்விக்குக் காசு 

தேவை - என்பதனை என் கண்ணீரில் உணர்ந்து நீயும்..

கடல் நீரில் முத்தெடுத்து என் கண்ணீரை கரும்பாக்கி அவ் வலியிலும் நீ ஆனந்தம் கண்டாய்...

நடு நிசியில் கண் விழித்து கடல் காற்றை உள்ளெடுத்து என் கவலைகளை போக்குவதற்காய் கடல் வலையை ஆயுதமாக்கி கடலுக்கு நீ செல்வாய்..

நீ சென்ற வழி நோக்கி விழி வைத்து என் தாய் நோக்க என் கண்ணிரண்டும் குழமாகும்..

கடலுக்கு நடுவினிலே குளிர் காற்றில் நீ நடுங்கி - நீருக்கு விருந்தாக 

என் தந்தை மீள் திரும்புவாரோ?? எனும் அச்சத்தில் என் உள்ளமே நடு நடுங்கும்...

குடும்ப கஷ்டங்கள் உன் கண் முன் வந்து ஊசலாட 

கடலுக்கு அடியினிலே மரணத்தோடு போர் புரிந்து உன் செல்வம் எனை காண கரையினை வந்தடைவாய்..

உன்னை கண்ட மறு நொடியில் தாய் கண்ட சேயைப் போல் என் உள்ளமோ ஊஞ்சலாடும்..

உன் கஸ்டங்கள் ஆயிரம்....

 இருந்தாலும் என் முன் சிறு பிள்ளை போல குறும்பு செய்வாய்...

 என் தவறுகளை திருத்துவதற்காய் நீ சிறந்த ஆசானாய் மாறி கோபங்களை சிறை செய்வாய்..

என் சிறு வெற்றியை கூட உன் வெற்றியாய் எண்ணி மகிழும் நாள் எல்லாம் உன் உடல் வலி போக்க எனக்குள்ள ஆயுதம் என் வெற்றிகளே என்பதனை நான் உணர்ந்தேன்..

என் உயர்விற்காய் உன் உடலை அழித்தவனே...

என் வளர்ச்சிக்காய் உன் வாழ்வை தொலைத்தவனே...

உப்பு நீரில் சுழி ஓட உன் உறக்கத்தை தொலைத்தவனே.. 

உப்பு மூட்டை நீ சுமக்க உன் உதிரத்தை உரிமாக்கியவனே....

என் முதலும் முடிவுமான தேடிப் பெற முடியா முத்தே..

என் அகராதியில் இழக்க விரும்பா சொத்தே...

அப்பா 

உன் மனம் குளிர நானும் உயர்ந்து வரும் நிலையில் உன் உடல் வலியில் நீயும் முடங்கிக் போனாய்..😔

உன் உடல் மட்டும் சோர்ந்திருக்க உன்னை கண்டு என் உள்ளமே சோர்ந்து போக இறைவனிடம் மன்றாடி இரு கரம் ஏந்துகிறேன்..

என் வெற்றிகளின் இரகசிய மன்னனே...

நீ மீண்டும் என் துணையாய் நின்று என் தோல்கள் காக்க உன் மகளாய் நான் காத்திருக்கிறேன் என் உன்னத வீரனுக்காய்...

வலிகளுடன் இவள்😢

LiTTL€ WRiT€R...

✍️

Shima Harees

Puttalam Karambe

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.