நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான செய்தி.

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான செய்தி.

நாட்டில் நேற்றைய தினம் 351 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

தொற்றுறுதியானவர்களில் 36 பேர் தனிமைப்படுத்தட்டவர்கள் என்பதுடன் 312 பேர் திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படிஇ நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 89 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இதுவரையில் கிடைக்கவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.