மத்திய மாகாணத்தில் 3,781 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 3,781 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவ்வருடத்தில் கடந்த பத்து மாத காலத்தினுள் மத்திய மாகாணத்தில் 3871 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக சுகாதார திணைக்களத்தின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

அக்டோபர் மாதம் வரை கண்டி மாவட்டத்தில் 3149 பேரும்,மாத்தளை மாவட்டத்தில் 556 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 166 பேருமென மொத்தம் 3871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மாதம் டெங் நோயாளர் எவரும் பதிவாகாமையும், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அங்கு டெங்கு நோயாளரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதும் சிறப்பம்சமாகும்.இதேவேளை தற்போது நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையைத் தொடர்ந்து டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதால் மக்கள் தத்தமது வீட்டுச் சுற்றாடலை டெங்கு நோய் பரவாது சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத் திணைக்களம் வேண்டுகோள் விடுக்கின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.