நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய

நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய.

பொதுமக்கள் தமக்கான பொறுப்புணர்வுகளை மறந்து செயற்படுகின்றமையே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில்,

பேசிய ஜனாதிபதி, கொரோனா வைரஸின் பரவலுக்கு அரசாங்கம் மட்டும் காரணம் இல்லை என கூறினார்.

பொதுமக்களுக்கும் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது என்றும், அந்த பொறுப்பில் அவர்கள் தோல்வியுற்றதால் தான் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, பலர் கொழும்பிலிருந்து காலி, எல்ல போன்ற இடங்களுக்குச் சென்றதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது மிகவும் பொறுப்பற்றது என தெரிவித்த ஜனாதிபதி, பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை அரசாங்கத்தால் மட்டுமே எடுக்க முடியாது என்றும் கூறினார்.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அத்தோடு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் எவரும் வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது என்றும் அதற்கு பதிலாக அவர்கள் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.