ஹோட்டல்களுக்கான பாதுகாப்பு சான்றிதழ் அடுத்த வாரம்...

ஹோட்டல்களுக்கான பாதுகாப்பு சான்றிதழ் அடுத்த வாரம்...

நாட்டில் உள்ள 40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமது தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ள மற்றும் தமது அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் , கொரோனா தொற்றுக்கு பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் தமது அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்புக்கு உகந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்க அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.