அமைச்சர் பவித்ரா இராஜினாமா செய்ய வேண்டும்.

அமைச்சர் பவித்ரா இராஜினாமா செய்ய வேண்டும்.

நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத,சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி ,கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கூறியிருந்தார். ஊடக சந்திப்பில் தொடர்ந்து பேசுகையில்;

ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டபோதும், ​​அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டிருந்தால், நாட்டின் தற்போதைய நிலைமை தவிர்த்திருக்கலாமென்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ,இருந்தபோதும் அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கே முன்னுரிமை வழங்கி, ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை, நாட்டை முடக்காமல் இருந்தது பெரும் குற்றமென்றும் ஹரின் பெர்னாண்டோ எம்.பி குற்றம் சாட்டினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.