உலகை அச்சுறுத்தும் கொரோனா! அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாவது தெரியுமா?

உலகை அச்சுறுத்தும் கொரோனா! அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாவது தெரியுமா?

உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த 3 நாட்களில் இலங்கை 3 இடங்கள் முன்னேறி 109 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் வெகுவாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

இந்நிலையில்இ நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதமளவில் சுமாராக 130ஆவது இடத்தில்,

இருந்த இலங்கை கடந்த வாரத்தில் சடுதியாக முன்னேறி 112ஆவது இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், கடந்த 3 தினங்களில் மேலும் 3 இடங்கள் முன்னேறி 119ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.