தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வருகின்றார் பசில்

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வருகின்றார் பசில்...


பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்‌ஷ நாளைய தினம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி 20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலைமையில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள பஸில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதை கொழும்பிலுள்ள அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆளும் கட்சி உறுப்பினரான ஜயந்த கொட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்து பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதற்கு வழிவகுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு பதவியேற்கும் பட்சத்தில் புதன்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுப் பதவியும் பசில் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ,பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷா டி சில்வா இன்று மாலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு ஒன்றிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார். நாளை அல்லது சில தினங்களில் பசில் பதவியேற்பார் என ஹர்ஸா தனது பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.