தேசிய அடையாள அட்டை பாவனையில் புதிய நடைமுறை

தேசிய அடையாள அட்டை பாவனையில் புதிய நடைமுறை

தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடைய அட்டை செயற்பாட்டிற்கு இந்த திட்டத்தை இடைக்கால தீர்வாக அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனம், அரச கூட்டுத்தாபனம், அரசியலமைப்பு சபை, அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் இலங்கையில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களில் தேவைகளை பூர்த்தி செய்யும் போது வாடிக்கையாளரின் விருப்பப்படி மட்டுமே அடையாள அட்டை தகவல்களை சான்றளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் வாடிக்கையாளர்களின் தகவல்களை சான்றளிப்பதற்காக குறித்த நிறுவனங்களினால் ஆட்பதிவு திணைக்களங்களுடன் முழுமையான ஒப்பந்ததிற்கு வர வேண்டும்.

தனிப்பட்ட அடையாளத்தை நம்பகத்தன்மையுடன் சரி பார்க்கவும், தேசிய அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.