வட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

வட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி.

“மெசேஜுகளை காணாமல் போகச் செய்வது” (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்சப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து, அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலிலுமே மெசேஜுகள் தானாக அழிந்துவடும்.

இது சேட்டுகளை தனிப்பட்ட முறையில் பாதுகாக்க உதவும் என பேஸ்புக்கின் வாட்சப் செயலி தெரிவிக்கிறது.

எனினும், மெசேஜுகளை பெறுபவர் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தோ அல்லது தங்களுக்கு வேண்டிய செய்திகள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு ஃபார்வாரட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

“நீங்கள் செய்த சேட்கள் நிரந்தரமாக உங்கள் போனில் இருக்காதது மனநிம்மதியை தரும். நீங்கள் அழிக்க மறந்த மெசேஜுகள் இதனால் ஏழு நாட்களுக்கு பிறகு தானாக அழிந்துவிடும்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.