திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கு காரணம் இதுதான்.

திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கு காரணம் இதுதான்.

தென்னிலங்கையில் பாணந்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் மலபார் என்ற பெயரில் மேற்கொண்ட கடற்படை பயிற்சி ஒத்திகையே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

கடந்த 02 ஆம் திகதி பாணந்துறை கடற்கரையில் சுமார் 100 திமிங்கிலங்கள் வரை கரையொதுங்கியதோடு, அதில் 10 திமிங்கிலங்கள் வரை உயிரிழந்திருந்தன.

சூழலியல் வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னரே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய ஏனைய திமிங்கிலங்கள், பிரதேசவாசிகள், காவல் துறையினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் குறித்த பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக சூழலியலாளரான நயனக்க ரண்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடற்படைப் பயிற்சிகளின் போது மேற்கொள்ளப்பட்ட வெடிப்புகள் மற்றும் நீருக்கடியிலான ஒத்திகைகள் காரணமாக இயல்பு நிலையை இழந்த கடலுயிர்கள் இவ்வாறு கரையை நோக்கி வந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.