வீட்டில் இருந்து வெளியேற இருவருக்கு மாத்திரமே அனுமதி


வீட்டில் இருந்து வெளியேற இருவருக்கு மாத்திரமே அனுமதி

நாட்டில், ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் செயற்பாட்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக சுகாதார வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுகாதார அமைச்சினால் குறித்த வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘நாட்டின் தற்போதைய நிலை 3ஆவது ஆபத்தான நிலை என்பதனால் வீட்டில் இருந்து வெளியேற இரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

மேலும், பேருந்து மற்றும் புகையிரதம் போன்ற பொது போக்குவரத்தின் இருக்கைக்கு நுற்றூக்கு 75 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது.

இதேபோன்று அரச மற்றும் தனியார்த்துறை அலுவலகங்களில் குறைந்தபட்ச ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும். வியாபார நிலையங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மேலும் அத்துடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் மூடப்பட வேண்டும். நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.