கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட மூன்று பெண்களுக்கு கொரோனா!

கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட மூன்று பெண்களுக்கு கொரோனா!

எட்டியாந்தோட்டை- இங்கிரியாவத்த பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண் சிகிச்சைக்காக, ஐ.டி.எச்.இல் நேற்று (திங்கட்கிழமை) இரவு சுகாதார பரிசோதகர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் தந்தைக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எம்பிலிபிட்டிய, உடவளவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.