மட்டக்களப்பு காத்தான்குடியில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்! ஒருவர் படுகாயம்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்! ஒருவர் படுகாயம்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயமடைந்ததுடன்,

கடையின் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

குறித்த கடை வழமைபோல திறந்திருந்து வியாபாரநடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது காலை 10.00 மணியளவில் திடீரென தீப்பற்றியது இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பொலிசார் உடனடியாக தண்ணீரை உற்றி அனைக்க முயற்றித்ததுடன் தீயினுள் அகப்பட்ட கடை உரிமையாளர் தீயினால் படுகாயமடைந்த நிலையில் மீட்டனர்

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினரும் சுமார் இரு மணி நேர போராட்த்தின் பின்னர் தீPயைக் கட்டுப்பாட்டினுள் கெண்டுவந்தனர்

இதேவேளை குறித்த வர்தகநிலையம் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமாகவும்; எரிவாயு முகவர் நிலையமுமாகும். இதனால் அருகிலுள்ள கட்டிடத்திலுள்ளவர்கள் அச்சம் காரணமாக கட்டிடத்தை விட்டு சிலமணிநேரம் வெளியேறினர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.