உடனடியாக நிறுத்துங்கள் - அதிரடி டுவிட்.

உடனடியாக நிறுத்துங்கள் - அதிரடி டுவிட்.

வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்துங்கள் என்று டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

எனினும், தேர்தல் முடிந்து 2 நாட்கள் கடந்த பின்னரும் வாக்கு எண்ணிக்கையில் இழுபறியான நிலை நீடித்து வருகிறது.

வெளிவந்த தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பைடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

முன்னாள் துணை ஜனாதிபதி பைடன் இப்போது அமெரிக்காவின் 46-வது அதிபராக ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுதேர்தலை கோரும் டிரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகளின் இறுதி முடிவு அலாஸ்கா (3), ஜோர்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20 தேர்தல் கல்லூரி வாக்குகள்) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளை பொறுத்து அமையும்.

மேலும் பைடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா (6) தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.