தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை

தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை.

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 12 ரூபா குறைந்தபட்ச கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்தார்.

அதன்படி இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தனியார் பொது போக்குவரத்து சாதனங்களுக்குள் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றுவதாயின் அரசாங்கம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

கொவிட் – 19 வைரஸ் முதலாம் தாக்கம் ஏற்பட்ட காலத்தில் தனியார் பஸ் சங்கத்தினருக்கு வழங்கிய வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கருத்திற் கொண்டே ஓர் ஆசனத்தில் ஒருவர் மாத்திரம் பயணிக்க அனுமதிக்கத் தீர்மானித்தோம். இதற்காக 12 ரூபா குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக குறுகிய காலத்துக்கு அதிகரிக்குமாறு போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும் ,அரசாங்கம் எமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அல்லது நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிடின் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.