முஸ்லிம்களின் ஜனாஸாவை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய பிரதமர் முயற்சி!! முஸ்லீம் சமய விவகார இணைப்புச் செயலாளர் தெரிவிப்பு!

முஸ்லிம்களின் ஜனாஸாவை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய பிரதமர் முயற்சி!! முஸ்லீம் சமய விவகார இணைப்புச் செயலாளர் தெரிவிப்பு!

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த உடல்களைத் தகனம் செய்வது தொடர்பில் குறித்த வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்களுகடைய உடல் தகனம் செய்யாமல் புதைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் சமய விவகாரத்திற்கான இணைப்புச் செயலாளரும் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பிரதமரின் இணைப்பதிகாரியுமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் சுகாதார அதிகாரிகள் எடுத்த தீர்மானத்திற்கு இணங்கவே அரசாங்கம் முழு நாட்டினுடைய மக்களுடைய பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடல் தகனம் செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கமைய தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களுடைய தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் முஸ்லிம்கள் இந்த உடல் தகனம் செய்யும் விடயத்தில் அதிருப்தியை கொண்டுள்ளனர். இது தொடர்பில் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் என்னிடம் முறைப்பாடுகளை முன் வைத்திருந்தார்கள்.

இந்த விடயம் தொடர்பில் நான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கருத்தினைப் பகிர்ந்து கொண்ட போது அவர் குறித்த வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க பிரதமர் அவர்கள் முஸ்லிம்களுகடைய உடல் தகனம் செய்யாமல் புதைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அதே போன்று அமைச்சர் அலி சப்ரி அவர்கள் அமைச்சரவைக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் சிறந்த முடிவுவினைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரப் பத்திரத்திரம் ஒன்றை இன்று அல்லது நாளை சமர்ப்பிக்கவுள்ளார்.

அதேவேளை, அமைச்சரும் பாராளுமன்ற கொரோடாவானமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களிடம் இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பிக்கவுள்ள அமைச்சரவை பத்தரிரத்திற்கு ஆளும் தரப்பு அமைச்சர்களுடைய ஆதரவைப் பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.