பிராய்லர் சிக்கன் சாப்பிடலாமா?

 பிராய்லர் சிக்கன் சாப்பிடலாமா?இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட உணவகங்களில் சாப்பிடுவதையே மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதில் முதல் இடத்தை பிடிப்பது பிராய்லர் சிக்கன் தான்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை விரும்பி சாப்பிடுகின்றனர்.அதிலும் விதவிதமான கலர்களில் விற்கப்படும் பிராய்லர் சிக்கன் உணவுகளையே மிகவும் விரும்புகின்றனர்.


இந்த உணவு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் அதை தவிர்க்க முடியாமல் அதன் சுவைக்காக அதை விரும்பி சாப்பிடுகின்றனர். பிராய்லர் சிக்கனில் உள்ள கிருமிகள் மற்றும் வித்தியாசமான பாக்டீரியாக்கள், ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கிறது.


பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும் வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல் அதற்கு செலுத்தப்படும் மருந்துகள் ஊசிகள் அனைத்தும் ரசாயனங்களால் ஆனது.நல்ல முறைப்படி அதாவது கோழிகள் பண்ணையில் ஆரோக்கியமா வளர நல்ல உணவாக சோளம்,சோயாபீன்ஸ்,கருவாடு கொடுத்து ஆரோக்கியமான முறையில் மக்களுக்கு உண்ண உணவாக கறியாக கொடுப்பதே அடிப்படை அறிவியலின் படி பிராய்லர் சிக்கன் . 


ஆனால் கோழிக்கு உணவுகள் மூலமும் நேரடியாக மருந்துகள் மற்றும் ஊசிகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விற்பனைக்காக வளர்கிற கோழிகளுக்கு எந்த நோயும் வராமல் இருப்பதற்காகவும், 40 நாட்களிலேயே அதிக எடையுடன் வளர்வதற்காகவும் இதுபோன்ற மருந்துகள் செலுத்தப்படுகிறது.


இத்தகைய மருந்துகள் மூலம் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வரும்போது பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றோம்.இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.


பிராய்லர் கோழியில் ஈகோலை என்னும் பாக்டீயாவும் உள்ளது. இவையும் ஒருவகையான புட் பாய்சனை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமின்றி, இவை சிறுநீரக பாதையில் கடுமையான நோய்த்தொற்றுக்களையும் ஏற்படுத்து கிறது.


பிராய்லர் கோழியில் அதிக அளவு கொழுப்பு காணப்படுகிறது.அனால் நாட்டுக் கோழியில் அத்தகைய கெட்ட கொழுப்புகள் இல்லை,அதே சமயம் உடலுக்கு மிகவும் நல்லதாகும்.


ஆனால் நாட்டுகோழி விலை மிகவும் அதிகமாக விற்கப்படுவதால் மக்கள் அதை வாங்கி உண்பதை தவிர்த்து விடுகின்றனர்.அதற்க்கு மாறாக விலை மலிவாக கிடைக்கக் கூடிய,உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழியை வாங்கி சாப்பிடுகின்றனர்.


பிராய்லர் கோழியை அதிக அளவில் விரும்பி சாப்பிடுவதால் பல்வேறு பருவ மாற்றங்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர்.


சிறு வயதிலேயே பூப்படைதல்,இளம் வயதிலேயே அதிகப்படியான வளர்ச்சியடைதல்,சர்க்கரை நோய் அதிகரிப்பு,புற்று நோய் ,மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம்,தோல் பிரச்சனைகள்,என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. 


எனவே வெளியிடங்களில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக,பிராய்லர் கோழி வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.மேலும் நாட்டுக்கோழியையே பிராயலார் சிக்கன் முறைப்படி சமைத்து உண்பதே சிறந்தது.
No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.