இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தான் எனது யுத்தம்.இஸ்லாமியர்களோடு அல்ல!

இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தான் எனது யுத்தம்.இஸ்லாமியர்களோடு அல்ல!

இஸ்லாமிய தீவிரவாதத்துடன் மாத்திரமே எனது யுத்தம் மாறாக இஸ்லாம் மதத்துடன் அல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவம் கவலையளிக்கும் வகையில் உள்ளன.

ஏனெனில், சர்ச்சைக்குரிய முகம்மது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதற்காக ஆசியர் சாமுவேல் பாடி என்பவர் தீவிரவாதியாக தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யபட்டார்.

ஆசிரியரின் இறுதிச் சடங்கில் பேசிய இமானுவல் மேக்ரான், கேலிச்சித்திரக் கலாச்சாரம் தொடரும், அது தங்கள் பேச்சுரிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை என்று கூற, பல இஸ்லாமிய நாடுகள் மேக்ரானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.

அதுமட்டுமின்றி ஊடகம் ஒன்றில் பிரான்ஸ் பிரெஞ்சு இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

மேலும் இது குறித்து ஜனாதிபதி மேக்ரான் அளித்துள்ள விளக்கத்தில் பிரெஞ்சு இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் செயலை அரசு ஒரு போதும் அனுமதிக்காது. 

எங்கள் யுத்தம் எல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரானதே தவிர, இஸ்லாம் மதத்துக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.