அவுஸ்திரேலியா காடுகளில் மீண்டும் விடப்படும் கோலா கரடிகள்!

அவுஸ்திரேலியா காடுகளில் மீண்டும் விடப்படும் கோலா கரடிகள்.

அவுஸ்திரேலியாவில், காட்டுத் தீயினால் படுகாயமடைந்த கோலா கரடிகள், சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கங்காரு தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 5,20,000 ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலான நிலையில், கடுமையான தீ காயங்களுடன் 100 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் மீட்கப்பட்டன

காயங்களுக்கு மருந்திட்டு, சத்தான உணவு வகைகளை வழங்கி கரடிகளை பராமரிக்கும் விலங்கு நல ஆர்வலர்கள், காயங்கள் குணமடைந்ததும், மீண்டும் அவைகளை வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர்.

மேலும் ,கங்காரூ தீவில், கடந்த ஆண்டு 50,000 கோலா கரடிகள் இருந்த நிலையில், காட்டுத்தீயால் தற்போது 5000 கரடிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.