கோலியின் பிறந்தநாள்

கோலியின் பிறந்தநாள்

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தன்னுடைய 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து ஆர்சிபி, ஐபிஎல் உள்ளிட்டவை தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை 12 மணியளவிலேயே தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளன. 

கோலி தங்களுடன் 12 வருடங்களாக இருப்பதை குறிப்பிட்டுள்ள ஆர்சிபி அணி, அவர் தங்களது அணிக்காக ரத்தம், வியர்வை மற்றும் கண்ணீரை தந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐபிஎல்லில் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது ஆர்சிபி அணி. நாளை நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. கடந்த சில போட்டிகளில் தோல்வியடைந்தாலும், தொடரின் ஆரம்பத்தில் இருந்து சிறப்பான வெற்றிகளை தந்துள்ளது ஆர்சிபி.

இந்த வெற்றிகளுக்கு ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலியும் காரணம். அவர் அணியை சிறப்பாக வழிநடத்தியதாலேயே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. 

இந்நிலையில் தன்னுடைய 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார் விராட் கோலி. இதையொட்டி ஆர்சிபி மற்றும் ஐபிஎல் உள்ளிட்டவை 12 மணியளவிலேயே தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

அதனிடையே ஐபிஎல் அணியும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்துள்ள விராட் கோலி என்று பாராட்டு தெரிவித்துள்ள ஐபிஎல், இந்த சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிராக அவர் எடுத்த 90 ரன்களுக்கான வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

மேலும் ,இதுவரை ஐபிஎல்லில் 191 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 5872 ரன்களை குவித்துள்ளார். தற்போதைய ஐபிஎல் 2020 சீசனிலும் லீக் போட்டிகளில் மட்டுமே 460 ரன்களை குவித்ததன்மூலம் தன்னுடைய அணியை பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேற்றியுள்ளார். கடந்த 2016க்கு பிறகு அந்த அணி தற்போது பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது.No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.