மும்பை தான் சிறந்த ஐபிஎல் அணி : இதில் எந்த சந்தேகமும் இல்லை- வில்லியர்ஸ்

மும்பை தான் சிறந்த ஐபிஎல் அணி : இதில் எந்த சந்தேகமும் இல்லை- வில்லியர்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 13வது ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய சிறந்த அணி மும்பை இந்தியன்ஸ் தான் என்று தென் ஆப்பிரிக்க அதிரடி துடுப்பாட்ட வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரருமான டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"ஐபிஎல் கிண்ணம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் சிறந்த அணி மும்பை தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், டிரென்ட் போல்ட், பும்ரா ஆகியோர் முத்திரை பதித்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.