மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியின் ரகசியம்: உண்மையை உடைத்த ஜாம்பவான் ஜெயவர்தனே

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியின் ரகசியம்: உண்மையை உடைத்த ஜாம்பவான் ஜெயவர்தனே

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 5-வது முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே, தமது அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி பொதுவாக தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் அணி என்றும், ஒரு சில நட்சத்திர வீரர்கள் தவிர அனைவரும் அதில் கலந்து கொள்கின்றனர் எனவும் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

கிண்ணத்தை வென்ற வெற்றிக்களிப்புடன், அடுத்த ஆண்டுக்கான பயிற்சிகள் தொடங்கப்படும் எனவும், உள்ளூர் வீரர்களுடன் இணைந்து அந்த பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அணி உரிமையாளர்களும் அதன் நிர்வாகமும் உணர்வுபூர்வமாகவும் முழு ஈடுபாடுடனும் அணியை வழிநடத்திச் செல்வதாக ஜெயவர்தனே குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, புதிய வீரர்களை தேடும் பணியும் அத்துடன் முன்னெடுக்கப்படும் எனவும், அது இந்திய அளவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கான பணியை மிகச்சிறப்பாக செய்து முடிக்க, அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு உதவிகளும் நிர்வாகம் செய்து தருவதாகவும், சில வேளைகளின் அணி வீரர்கள் தம்மிடம் இருந்து கடுமையான நடவடிக்கைகளையும் எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியின் ரகசியமாக இருப்பதாக பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.