உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன்

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் 

மேஷம்: அசுவினி: கனவுகள் நனவாகும். சிறிய வெற்றி ஏற்படும். மனநிறைவு உண்டு.

பரணி: பகையை விடுத்து நட்பாவது பற்றிச் சிந்திப்பீர்கள். லாபம் உயரும்.

கார்த்திகை 1: பிரியமான சிலரைத் தேடிச்சென்று சந்திப்பீர்கள். சோர்வு நீங்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முந்தைய முயற்சிகளில் முன்னேறப் புதிய வழி தென்படும்.

ரோகிணி: உங்களின் மதிப்பு உயரும். முயன்ற விஷயங்கள் தானாக நடைபெறும்.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர்கள் உங்கள் விருப்பமறிந்து நடந்து கொள்வர்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: முன்னேற்றம் காண்பதற்கு எடுக்கும் முயற்சி வெல்லும்.

திருவாதிரை: பணி பற்றி எடுத்த முயற்சிக்கு உடன்பிறப்புகள் உதவுவர்.

புனர்பூசம் 1,2,3: உறவினருடன் சமீபத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும்.

கடகம்: புனர்பூசம் 4: எடுத்த முயற்சிகள் தாமதித்து நடக்கும் இனிமையான நாள்.

பூசம்: பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ஆயில்யம்: வரன்கள் வாயில் தேடி வரும். அரசியலில் நன்மை கிடைக்கும்.

சிம்மம்: மகம்: முயற்சிகளில் வெற்றி பெற கூடுதலாக உழைப்பீர்கள்.

பூரம்: முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.

உத்திரம் 1: நிகழ்காலத் தேவைகள் சிறு முயற்சியில் நிறைவடையும்.

கன்னி: உத்திரம் 2,3,4: திடீர்ப் பயணம் உண்டு. கோபத்தினால் வருத்தம் வரும்.

அஸ்தம்: பணிகளில் ஏற்பட்ட தொந்தரவு அகலும். அவசரம் வேண்டாம்.

சித்திரை 1,2: பிள்ளைகள் உங்களை சற்றுப் பெருமைப்படுத்துவார்கள்.

துலாம்: சித்திரை 3,4: பகை அகலும் நாள். கலைகளில் ஆர்வம் ஏற்படும்.

சுவாதி: பணிகளில் அவசரம் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

விசாகம் 1,2,3: பெண்கள் குழந்தைகளை கவனமாகக் கையாளுங்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: நாளின் முதல் பாதியில் மனம் நிறையும் செய்தி வரும்.

அனுஷம்: மனதுக்குப் பிடித்தவரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள்.

கேட்டை: எதிலும் அவசரம் வேண்டாம். பேச்சில் கவனமாக இருக்கவும்.

தனுசு: மூலம்: சுப நிகழ்ச்சிகள் பற்றிய தீர்மானம் முடிவுக்கு வந்து மகிழ்விக்கும்.

பூராடம்: அரசியல்வாதிகளின் நட்பு கிட்டும். வருமானம் நிறைவு தரும்.

உத்திராடம் 1: தொழில் முன்னேற்றம் ஓரளவுக்கு உண்டு. பயம் நீங்கும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: அதிகாரத்தை கைவிட்டு தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள்.

திருவோணம்: வீடு, வாகனம் புதுப்பித்தல் வேலை பாதியிலேயே நிற்க கூடும்.

அவிட்டம் 1,2: சிலரை நம்பிச் செயல்பட்ட விஷயங்களில் ஏமாற்றம் வரலாம்.

கும்பம்: அவிட்டம் 3,4: பெற்றோரின் உடல்நலம் சீராகி மன நிம்மதி அளிக்கும்.

சதயம்: உங்களுக்கு உதவக்கூடிய ஒருவர் வீடு தேடி வரலாம்.

பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.


மீனம்: பூரட்டாதி 4: உறவினர்களின் ஆதரவு கிடைத்து உற்சாகம் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: கணவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

ரேவதி: உடல்நலனுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.