சிரமமே இல்லாமல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்

சிரமமே இல்லாமல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

 ஐபிஎல் டி.20 தொடரில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் ஸ்ரேயஸ் ஐயர் (65*) மற்றும் ரிஷப் பண்ட் (56) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 156 ரன்கள் எடுத்து.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக டிரண்ட் பவுட்ல் 3 விக்கெட்டுகளையும், கவுட்டர் நைல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரும், விக்கெட் கீப்பருமான டி காக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி 51 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்தார்.

அடுத்தடுத்து வந்த பொலார்ட், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் சொதப்பினாலும், இளம் வீரரான இஷான் கிஷன் 19 பந்துகளில் 33* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரிலேயே அசால்டாக இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் தட்டி தூக்கியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக நார்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.