க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பலருக்குக் கொரோனா: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பலருக்குக் கொரோனா: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்



க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்றைய தினம் நிறைவடைந்தது.


இந்நிலையில், பரீட்சையின் முதல் நாளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 பரீட்சார்த்திகள் இருந்ததாகவும், மூன்று வாரங்களுக்குள் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாகவும்


பாதிக்கப்பட்ட 27 பரீட்சார்த்திகள் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும் (ஐ.டி.எச்), பனாகொடை இராணுவ முகாமில் ஒரு பரீட்சார்த்தியும், மற்றொரு பரீட்சார்த்தி முல்லேரியாவா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் போது அவர்கள் அனைவரும் பரீட்சைக்கு தோற்றினர் எனவும் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.


இந்த மூன்று வார பரீட்சையின் போது, தனிமைப்படுத்தப்பட்ட 568 பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்கு தோற்ற வசதிகள் அதிகாரிகளால் செய்துகொடுக்கப்பட்டன.


இந்நிலையில், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் விடைத்தாள்களை திருத்தும் பணி தொடர்பான முடிவை எடுக்க வேண்டும் எனவும், இரண்டு வார காலத்திற்குள் தேவையான முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.