1000 ரூபாவிற்கு 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி இன்று முதல் விநியோகம்.

 1000 ரூபாவிற்கு 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி இன்று முதல் விநியோகம்.


எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்று 1000 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இன்று (01) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் 27 அத்தியாவசிய பொருட்களுக்காக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதுடன், இந்த சித்திரை புத்தாண்டியிலும் மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதன்படி, 12 அத்தியாவசிய பொருட்களை 1000 ரூபாவிற்கு வழங்க நடவடிக்iஎ எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி, ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசி, ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி, ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு, ஒரு கிலோகிராம் கோதுமை மா, ஒரு உப்பு பக்கட், 250 கிராம் நெத்தலி, ஒரு பக்கட் மிளகாய் தூள், ஒரு பக்கட் சோயா, ஒரு பக்கட் தேயிலை தூள் மற்றும் முகக்கவசம் ஆகியன இந்த பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பொதியொன்று 1000 ரூபாவிற்கு வழங்கப்படுவதன் ஊடாக, நுகர்வோர் ஒருவருக்கு 410 ரூபா இலாபம் கிடைக்கின்றது என அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.