13.1 ஓவரிலேயே இலங்கை அணியை துவசம் செய்தது மே.தீவு.

 13.1 ஓவரிலேயே இலங்கை அணியை துவசம் செய்தது மே.தீவு.

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு ஆன்டிகுவாவில் அமைந்துள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

132 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 13.1 ஓவரை மாத்திரமே எதிர்கொண்டு வெற்றியிலக்கை கடந்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய லென்ட்ல் சிம்மன்ஸ் மற்றும் எவின் லூயிஸ் ஆகியேர் கூட்டாக இணைந்து முதல் மூன்று ஓவர்களில் இலங்கை அணியின் பந்துப் பரிமாற்றங்களை சின்னாபின்னமாக்க ஓட்ட எண்ணிக்கையும் 50 ஓட்டங்களை எட்டியது.

குறிப்பாக முதல் ஓவருக்கு தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளினார் லூயிஸ்.

முதல் ஓவர் முடிவில் - 19

இரண்டாவது ஓவர் முடிவில் - 27

மூன்றாவது ஓவர் முடிவில் - 48

இந் நிலையில் நான்காவது ஓவருக்காக அகில தனஞ்சய தனது இரண்டாவது ஓவருக்கான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியின் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது.

அகிலவின் அந்த ஓவரின் முதல் பந்துக்கு ஒரு பவுண்டரியை விளாசித் தள்ளினார் லூயிஸ். எனும் அடுத்த பந்தில் மொத்தமாக அவர் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களுடன் குணதிலக்கவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய கரீபியன் புயல் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே எல்.பி.டபிள்யூ மு‍றையில் டக்கவுட்டுடனும், அவரைப் போன்றே விக்கெட் காப்பாளர் நிகோலஷ் பூரணும் தனது முதல் பந்து வீச்சில் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் நான்காவது ஓவருக்கு வீழ்த்தப்பட்டன.

நான்காவது ஓவர் - 4 W W W 1 4

அது மாத்திரமன்றி அணியின் நான்காவது விக்கெட்டும் ஐந்தாவது ஓவரின் இறுதிப் பந்துக்கு பறிபோனது. 

அதன்படி ஆரம்ப வீரராக களமிறங்கிய லென்ட்ல் சிம்மன்ஸ் 26 ஓட்டங்களுடன் ஹசரங்கவின் பந்து வீச்சல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் கிரேன் பொல்லார்ட் மற்றும் ஹோல்டர் ஜோடி சேர்ந்து வான வேடிக்கை காட்ட ஆரம்பித்தனர்.

குறிப்பாக பொல்லார்ட், 2007 இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கின் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் என்ற சாதனையை மீண்டும் அரங்கத்தில் நிகழ்த்தி அசத்திக் காட்டி மெய் சிலிர்க்க வைத்தார்.

அதன்படி ஆறாவது ஓவருக்காக அகில தனஞ்சயவின் பந்துக்கு 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.

👉இலங்கை :- 131/9 (20)

👉பி.நிஸங்க 39 (34)

👉மே.தீவு :- 134/6 (13.1)

👉க.பொலார்ட் 38 (11)







No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.