இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து. 16 குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை.

இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து. 16 குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை.

𝑰𝑻𝑴▪️இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

𝑰𝑻𝑴▪️இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

𝑰𝑻𝑴▪️ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர். 

𝑰𝑻𝑴▪️தீ விபத்தையடுத்து, பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. 

𝑰𝑻𝑴▪️சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

𝑰𝑻𝑴▪️அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

𝑰𝑻𝑴▪️இத்தீவிபத்தால் பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

𝑰𝑻𝑴▪️பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

𝑰𝑻𝑴▪️தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த இராகலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.