கொழும்பில் ஒன்று குவிந்த பௌத்த தேரர்கள் - இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக கடும் சீற்றத்தில் ஞானசார தேரர்.

கொழும்பில் ஒன்று குவிந்த பௌத்த தேரர்கள் - இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக கடும் சீற்றத்தில் ஞானசார தேரர்.

𝑰𝑻𝑴▪️ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினால் பௌத்த அமைப்புக்களை அடிபணிய வைக்க முடியாது. 

𝑰𝑻𝑴▪️இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக அரசாங்கம் உரிய முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை கிடையாது.

𝑰𝑻𝑴▪️ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்தின் அரசியல் பிரச்சினையாகி விட்டது.

𝑰𝑻𝑴▪️இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக இனி கடுமையான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து முன்னெடுப்போம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சுதந்திர சதுக்க வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

𝑰𝑻𝑴▪️நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எடுத்துரைத்துள்ளோம்.

𝑰𝑻𝑴▪️குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அனைத்து அரசாங்கங்களும் அடிப்படைவாதத்தை வளரத்து எம்மை இனவாதிகளாக சித்தரித்தது.அனைத்து தரப்பினரது பலவீனத்தன்மையும் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலாக வெளிப்பட்டது.

𝑰𝑻𝑴▪️ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உக்கிரத்தன்மையினை வெளிப்படுத்தியது. குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்தது யார் ? எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க முன்னெடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 

𝑰𝑻𝑴▪️ஆணைக்குழுவின் ஆரம்பகால செயற்பாடுகள், விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெற்றன.ஆனால் ஆணைக்குழுவின் செயற்பாட்டின் இறுதி பகுதி அரசியல்மயப்படுத்தப்பட்டன.

𝑰𝑻𝑴▪️தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏதும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. மாறாக தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு பழி தீர்க்கும் ஒரு களமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயற்படுத்தப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்களை தடை செய்யும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இவ்வாறான சம்பவங்கள் வரலாற்று ரீதியில். இடம்பெற்றுள்ளன. அறிக்கைகளுக்கு பௌத்த அமைப்புக்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. 

𝑰𝑻𝑴▪️என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் பௌத்த அமைப்புக்கள் ஒருபோதும் செயற்படவில்லை.பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இனவாத செயற்பாடு என குறிப்பிட முடியாது.

𝑰𝑻𝑴▪️மத கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.

𝑰𝑻𝑴▪️சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை அரசாங்கத்துக்குள் அரசியல் பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது.பௌத்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பினை பௌத்த மத தலைவர்கள் அனைவரும் ஒன்றினைந்த ஏற்க வேண்டும்.

𝑰𝑻𝑴▪️இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு முன்nவைத்துள்ள யோசனைகளுக்கு மகாநாயக்க தேரர்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் .அனைத்து மத தலைவர்களையும் ஒன்றினைத்து நாடு தழுவிய ரீதியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான கடுமையான நடடிவடிக்கைகளை இனி முன்னெடுப்போம்.

𝑰𝑻𝑴▪️பாரம்பரிய முஸ்லிம் மக்களின் உரிமைளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. இஸ்லாமிய மத போர்வையில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படைவாதத்துக்கு எதிராகவே செயற்படுகிறோம். இதற்கு பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினரும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.