அமெரிக்காவிலிருந்து வந்த 17.2 மில்லியன் ரூபாய்!! வவுனியா இளைஞன் அதிரடி கைது.

 அமெரிக்காவிலிருந்து வந்த 17.2 மில்லியன் ரூபாய்!! வவுனியா இளைஞன் அதிரடி கைது.


பணமோசடி செய்த குற்றச்சாட்டில் வவுனியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞனை குற்ற விசாரணைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவருடைய வங்கி கணக்கிற்கு 17.2 மில்லியன் ரூபாய் பணம் அமெரிக்காவிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பல்வேறு கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் இவ்வாறு பணம் குறித்த இளைஞனின் கணக்கில் வைப்பிலிடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இவ்வாறு பண மோசடி இடம்பெறுவதாக 2020 ஏப்ரலில் முதன்முதலில் சி.ஐ.டி.க்கு புகார் வந்தது.

இலங்கையில் பல்வேறு நபர்களின் பல வங்கிக் கணக்குகளில் 140 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டதாக முறைப்பாடு வந்துள்ளது.

அந்த பணம் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் எடுக்கப்பட்டது என அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இவ்வாறான பணமோசடி தொடர்பாக 2020 ஏப்ரல் முதல் இன்றுவரை மொத்தம் 36 பேரை சிஐடி கைது செய்தது.

இது தொடர்பில் சி.ஐ.டி மேலும் விசாரணையை நடத்துகிறது. இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (எஃப்.ஐ.யு) விசாரணைக்கு உதவுகின்றதாகவும் அவர் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.