பசறை பஸ் விபத்து. சாரதிகள் தவிர்ந்த ஏனைய பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடக்க போவது என்ன?

 பசறை பஸ் விபத்து. சாரதிகள் தவிர்ந்த ஏனைய பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடக்க போவது என்ன?


பதுளை – பசறை – 13ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

வீதியில் கல் சரிந்திருந்த நிலையில், அதற்கு பொறுப்பு கூற வேண்டிய தரப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்திக்கான குத்தகையை மேற்கொண்டுள்ள தரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசறை பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன், 30திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.