20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்து எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு.

 20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்து எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு.


 உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் 20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்துத் தொகை எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. 

இந்த வசதியின் மூலம் இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என விசேட மருத்துவ நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

இலங்கை விலைகொடுத்து வாங்கிய ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்ணிக் தடுப்பு மருந்தும், சீனாவின் சைனாபார்ம் நிறுவனத்தின் தடுப்பு மருந்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தியாகும். 

சுகாதார அமைச்சு முறையான வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பு மருந்தேற்றல் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர்; மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.