டாம் வீதி சடலம் : தமது மனைவியா?/தனது மகளா? என கோரி 200 தொலைபேசி அழைப்புக்கள்.

 டாம் வீதி சடலம் : தமது மனைவியா?/தனது மகளா? என கோரி 200 தொலைபேசி அழைப்புக்கள்.


கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தலையற்ற யுவதியின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டிருந்தது.

இதன்படி, நேற்று முன்தினம் வரை குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு சுமார் 200 வரையான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன தனது மகளா அல்லது தனது மனைவியா என உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த தொலைபேசி அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாட்டிலிருந்தும் டாம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் தமது உறவினரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, பல புகைப்படங்களும் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.