காதல் விவகாரத்தால் இன்னொரு கொடூரம்: காரினால் ஒருவரை மோதி, கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை: நாரம்மலவில் சம்பவம்!

 காதல் விவகாரத்தால் இன்னொரு கொடூரம்: காரினால் ஒருவரை மோதி, கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை: நாரம்மலவில் சம்பவம்!


நாரம்மல – பஹமுனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரைக் காரினால் மோதச் செய்த பின்னர் அவரைக் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹமுனை பகுதியில் நேற்று (03) மாலை கார் ஒன்றில் வந்த நபர், இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதிய பின் மோதப்பட்டவர்களில் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர் சந்தேக நபரின் மனைவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபருக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்குமாறு சவால் விடுத்துள்ளனர்.

அதற்கமைய, உயிரிழந்த நபரும் இன்னும் சிலரும் இணைந்து சந்தேக நபரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது காரில் வந்த சந்தேக நபர் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மோதச் செய்துள்ளதுடன் , இதன்போது கீழே வீழ்ந்து கிடந்த நபரை சந்தேக நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதன்போது நாரம்மல – கிலின்பொல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், பஹமுணை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்வம் தொடர்பில் நாரம்மல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.