ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

 ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் தெளிவானது என கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை கடந்த நல்லாட்சி அரசாங்கம் புறக்கணித்தமையின் ஊடாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எந்தவித பொறுப்பும் இல்லை என குறிப்பிட்ட அவர், தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்களை தண்டிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.