ஒரு மணி நேரத்திற்குள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும்! மஹிந்த குடும்பத்திற்கு வந்த செய்தி.

 ஒரு மணி நேரத்திற்குள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும்! மஹிந்த குடும்பத்திற்கு வந்த செய்தி.நாட்டில் ஆட்சியைப்பிடிக்கும் அடுத்த ராஜபக்ஸ யார் என்பது எனக்கு தெரியும். எனினும் அதை இப்போது கூற முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு வரவேண்டும். அப்போதுதான் ஒரு போட்டி இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடன் இருந்தவர்கள் அவருக்கு மூலைச்சலவை செய்தே பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தவைத்தனர்.

தேர்தலில் தோல்வியடைந்த பின் ஒரு மணி நேரத்திற்குள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்று எமக்கு செய்தி கிடைத்தது.

ஒரு குழுவினர் வாகனத்தில் வந்து இறங்கி எம்மை வெளியேறக் கூறினர். அந்த ஒரு மணி நேரத்திற்குள் எமக்கு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நிலையில் எனது செல்லப்பிராணிகளை எங்கே கொண்டு செல்வது என்பதே எனக்கு பெரும் கேள்வியாக இருந்தது என அவர் தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.