21ஆம் திகதி பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! வேகமாக வருகின்றது அபாயகரமான சிறுகோள்.

21ஆம் திகதி பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! வேகமாக வருகின்றது அபாயகரமான சிறுகோள்.


மார்ச் 21, 2021 அன்று பூமியை தாண்டி ஒரு ‘அபாயகரமான சிறுகோள்’ செல்ல உள்ளது எனவும், இது அளவில் பெரியதாகவும், அபயாகரமானதாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விண்வெளியிலிருந்து வரும் சிறுகோள்கள் அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் வருகின்ற மார்ச் 21ம் தேதி பெரிய சிறுகோள் ஒன்று பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இது 2021ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும் மிகப்பெரிய மற்றும் வேகமான சிறுகோள் என்பதால் இது ஆபத்தானதாக கருதப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுகோள் 2001 FO32-இன் சுற்றுப்பாதை நன்கு அறியப்பட்டதால் பூமியில் மோதி பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் வினாடிக்கு 21 மைல் (34.4 கி.மீ) வேகத்தில் நகரும் என்றும் சிறுகோள் 2001 FO32 இன் விட்டம் 1 கிலோமீட்டர் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது மார்ச் 21 அன்று இரவு 9:33IST மணிக்கு (11:03 am ET) நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிக அருகில் என்பது, சுமார் 1.3 மில்லியன் மைல்கள் (2,016,351 கி.மீ) அல்லது 5 லூனார் டிஸ்டன்சில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

FO32 இன் வேகம் நம்பமுடியாத அளவிற்கு இருக்குமாம். மேலும் இது 97% சிறுகோள்களை விட பெரியதாக இருந்தாலும், அது கண்ணுக்குத் தெரியாது.

வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் 8” அல்லது பெரிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்திதான் அதன் இயக்கத்தைக் கவனிக்க முடியும்.

இந்த முறை, கடந்த 200 ஆண்டுகளில் இப்போதுதான் இந்த சிறுகோள் நம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. மார்ச் 21 அன்று தோன்றிய பின்னர், இந்தச் சிறுகோள் அடுத்ததாக 31 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 22, 2052 அன்று பூமியைக் கடந்து செல்லும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்கு சிறுகோள் 2001 FO32 ஐப் பார்ப்பதற்கான சிறப்பு வழிமுறைகளையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த விண்கல் தெற்கு வானத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகத் தெரியும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த சிறுகோளை வடக்கு வானத்தில் அதாவது ஸ்கார்பியஸ் மற்றும் சாகிட்டாரிஸ் (Scorpius and Sagittarius) ஆகியவற்றின் தெற்கு விண்மீன்களின் வழியாக பூமிக்கு அருகில் வரும்போது அதை பார்வையாளர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.