உலகளவில் ஊடகவியலாளர்கள் 65 பேர் கொலை! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

உலகளவில் ஊடகவியலாளர்கள் 65 பேர் கொலை! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

2020 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 65 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இறப்புகளுக்கு மேலதிகமாக, மார்ச் 2021 வரை உலகெங்கிலும் குறைந்தது 229 பத்திரிகையாளர்கள் சிறையில் இருப்பதாவும் தெரிவித்துள்ளது.

நான்காவது முறையாக, 14 கொலைகளுடன், அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் 10 பேர் இறந்தனர்.

பாகிஸ்தானில் ஒன்பது, இந்தியாவில் எட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியாவில் தலா நான்கு, நைஜீரியா மற்றும் யேமனில் தலா மூன்று. ஈராக், சோமாலியா, பங்களாதேஷ், கேமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் கொலைகள் நடந்தன.

2019ஆம் ஆண்டைவிட 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

எனினும் இறப்பு எண்ணிக்கை 1990 களில் இருந்ததைப் போலவே உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலைகள் குறித்த தனது ஆண்டு அறிக்கையின் விவரங்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டது.

இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள், வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் வெட்டு சம்பவங்களில் 16 வெவ்வேறு நாடுகளில் இந்த கொலைகள் நடந்ததாக ஐ.எஃப்.ஜே தெரிவித்துள்ளது.

1990 இல் ஐ.எஃப்.ஜே தொடங்கியதில் இருந்து மொத்தம் 2,680 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் துருக்கி “உலகின் மிகப் பெரிய பத்திரிகையாளர்களின் சிறைச்சாலை” என்று கூறியது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.