பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவில் 2500 பேர் மரணம் - 84 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி.

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவில் 2500 பேர் மரணம் - 84 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி.


சீரம் மற்றும் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு பிரேசில் சுகாதார கட்டுப்பாடு ஆணையம் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கி உள்ளது.

பிரேசிலில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2,500 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு ஆணையம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பொது விநியோகம் செய்ய பூரண அனுமதியை வழங்கி உள்ளது.

இதுகுறித்து இணையதள கலந்துரையாடலில் பேசிய பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு ஆணைய தலைமை இயக்குநர் கஸ்டாவோ மென்டிஸ் (Gustavo Mendes) அஸ்ட்ராஜெனிகாவின் இறுதி கட்ட ஆய்வு தரவுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததை அடுத்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், பிரேசிலின் பியோகிரஸ் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பிரேசிலில் அவசர கால தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.