ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது.

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது.

ஹோமாகம – கோனபொல பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஹோமாகம – கோனபொல பகுதியில் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு கிலோ 268 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 57 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ரஜகல்கொடகே சுகத் குமார என்ற சந்தேக நபருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை கடத்துவதற்கு நீண்டகாலமாக குறித்த பெண் உதவியுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்ணை மேலதிக சட்டநடவடிக்கைகளுக்கான பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.