திருமணமான 3 மாதத்தில் 21வயதான இளம் பெண்ணின் விபரீத முடிவு.

 திருமணமான 3 மாதத்தில் 21வயதான இளம் பெண்ணின் விபரீத முடிவு.


சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணொருவரே விபரீத முடிவெடுத்தார்.

நேற்று காலை அவது வீட்டில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவரை அயலவர்கள் மீட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரது உயிர் பிரிந்தது.

3 மாதங்களின் முன்னரே யுவதி காதல் திருமணம் செய்திருந்தார், யுவதியின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், பொலிஸ் நிலையம் வரை விவகாரம் சென்றது.

காதல் திருமணம் செய்யப் போவதாக ஜோடி உறுதியாக இருந்து திருமணம் செய்து கொண்டனர், குடும்ப தகராற்றினாலேயே யுவதி உயிரை மாய்த்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.