இலங்கை முழுவதும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுக்கவுள்ள மக்கள்.

 இலங்கை முழுவதும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுக்கவுள்ள மக்கள்.


தமிழ் சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதால் இலங்கையில் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் கடுமையான எரிவாயு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 2019 இல் 440 அமெரிக்க டொலராக இருந்த எரிவாயுவின் விலை பிப்ரவரி மாத இறுதியில் உலக சந்தையில் 604 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

எனவே 12.5 கிலோ எரிவாயுக்கு 770 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலிண்டரின் தற்போதைய விலையை ரூ .1,493 ஆகும். எனினும் இதை 2,148 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்கள் கோரியதற்கு அரசாங்கம் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் விலை அதிகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.